Google Classroom
GeoGebraGeoGebra Ders

கூம்பு வளைவரைகள் - வடிவியல் விளக்கம்

செயல்படுத்தும் விதம்

”அச்சுகளை காட்டவும்” என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆய அச்சுகளை வரைபடத்தில் காண / நீக்க இயலும். ”தளத்தினை சாய்க்க” என்பதற்கு கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் தளத்தினை சாய்க்க இயலும். ”தளத்தினை இடது/வலது நகர்த்த” என்பதற்கு கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் தளத்தினை இடது அல்லது வலது புறம் நகர்த்த இயலும். ”தளத்தினை மேலே/கீழே நகர்த்த” என்பதற்கு கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் தளத்தினை மேலே தூக்கவோ அல்லது கீழே இறக்கவோ இயலும். “காட்சியை மீட்டமைக்கவும்” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் செயல்பாட்டின் ஆரம்ப நிலைக்கு வர முடியும் “தளத்தினை மீட்டமைக்கவும்” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தளமானது ஆரம்ப நிலைக்கு மீண்டும் கொண்டு வர முடியும். ”சாய்வு காட்சி” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தளத்தை, கூம்பின் விளிம்புக்கு சாய்வாக கொண்டு செல்லலாம். பின்னர் தளத்தினை நகர்த்தும் ஸ்லைடர்கள் மூலம் பரவளைய வடிங்களை தெளிவாக காணலாம். ”மேல்புற காட்சி” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் கூம்பு வளைவரை வடிவங்களை நேரடியாக மேலிருந்து காண்பது போன்ற காட்சி கிடைக்கும். ”சுழற்றவும்” என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம், வரைபடமானது, Z அச்சைப் பொறுத்து சுழற்றப்படும்.